திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் & த்ரிஷா."? உண்மையான காரணம் இதுதான்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது . திரிஷா மற்றும் விஜய் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் & திரிஷா கூட்டணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட திரைப்படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தார். இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். திரையில் இவர்களது ஜோடி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் திரிஷா ரிலேஷன்ஷிப் பற்றிய கிசுகிசு
ஆரம்ப கட்டத்திலிருந்து விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் இடையேயான உறவு பற்றிய கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தது. தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா அவருடன் லிப்டில் இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திரிஷா மற்றும் விஜய் இருவரும் ஒரே பிளாட்டில் லிவிங் டுகெதர் ரேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் திரிஷா வெளியிட்ட புகைப்படம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியன் 2 திரைப்படத்தில் 'மிஸ்' ஆகும் முக்கிய கேரக்டர்.!! இயக்குனர் சங்கர் பகிர்ந்த தகவல்.!!
உண்மை நிலவரம்
அதன்படி விஜயின் புதிய அலுவலகம் இருக்கும் பிளாட்டில் திரிஷா புதியதாக வீடு ஒன்று வாங்கி இருக்கிறார். அங்கு வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இருவரும் நட்பாக சந்தித்து பழகுவதை கூட தவறாக சித்தரிக்கும் சமூக வலைதள கலாச்சாரத்தை சினிமா வட்டாரங்கள் பலவும் விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: வைரலாகும் சமந்தாவின் பதிவு.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!?