மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உட்பட பல படங்கள் மொழிகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றது. பிற மொழி ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து கல்கி ஏடி படத்தில் அர்ஜுனன் கதாபத்திரம் ஏற்று சிறப்புத் தோற்றமாகவும் நடித்துக்கொடுத்து இருந்தார். இதனிடையே, அவர் மும்பைக்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
మెట్లపై నుండి జారి పడ్డ విజయ్ దేవరకొండ...
— ChotaNews (@ChotaNewsTelugu) November 8, 2024
ముంబైలో ఓ కార్యక్రమానికి హాజరై వస్తుండగా మెట్లపై నుండి కాలు స్లిస్ అయింది. విజయ్కి ఎటువంటి గాయాలు కాకపోవడంతో తప్పిన ప్రమాదం. pic.twitter.com/pWz421m11N
இதையும் படிங்க: வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
காயமில்லாமல் தப்பினார்;
அங்கு விஜய் தேவரகொண்டா படியில் இருந்து இறங்கி வந்தபோது, திடீரென கால் இடறி சரிந்து விழுந்தார். இதனால் ஒருகணம் அதிர்ந்துபோனவர், பின் எழுந்து நின்று இயல்பாக நடக்கத் தொடங்கினார்.
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. நல்வாய்ப்பாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #JustIN: பாலிவுட் பாஷா., நடிகர் ஷாருக்கானுக்கு 'ஹிந்துஸ்தானி' கொலை மிரட்டல்; ரசிகர்கள் அதிர்ச்சி.!