மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் 4 நாட்களில் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா?
விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான 4 நாட்களில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வழிகிறது. லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இருந்த நிலையில் லியோ திரைப்படம் வெளியான 4 நாட்களில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மொத்தமாக 400 கோடி வசூல் செய்த நிலையில், லியோ திரைப்படம் வெறும் 4 நாட்களில் அந்த சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.