96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வாவ்.. விஜய் சேதுபதியின் மனைவியா இது! நயன் திருமணத்தில் அம்சமா ஜொலிக்கிறாரே! வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் எக்கசக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் சினிமா துறையில் முன்னேறியுள்ளார். இவருக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
விஜய் சேதுபதி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி வருகிறார். விஜய் சேதுபதி அண்மையில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோர் அசத்தலாக கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.