நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
#MeToo. சிக்கி சீரழியும் தமிழ் திரையுலகம்! விசாரணை நடத்த மூவர் குழு. நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு!
திரையுலகில், தேசிய அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர்களில் ஒருவரும் 7 முறை தேசிய விருது பெற்றவருமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரபல பாடகி சின்மயி பல வருடங்களுக்கு முன்பு அவருக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதில் கவிஞர் வைரமுத்துவாள் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்தியாவில் #MeToo என்ற ஹாஷ்டாக் மூலம் பெண்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள்தான் சிக்குகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக வாய் திறந்துள்ளது தென்னிந்திய திரையுலகம்.
இதைப்பற்றி பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் கூறுகையில் விரைவில் #MeToo சம்மந்தமான பிரச்சனைகளை பற்றி விசாரிக்க மூவர் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தப்பு செய்தவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.