மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகர்.. அடடே இவரா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று நடிகர் விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் GOAT படத்தில் பிரபல நடிகரும், பாடகருமான யுகேந்திரன் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் விஜய்யுடன் யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 18 வருடங்களுக்கு பிறகு யுகேந்திரன், விஜய் படத்தில் நடிக்க உள்ளார்.