மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாபநாசத்தை மிஞ்சிய.. பயங்கர கொலை.. கள்ளக்காதல் மோகத்தில்.. பலியான கேர்ள்பெஸ்ட்டி.!
கேரள மாநிலம் கருநாகப் பள்ளியில் விஜயலட்சுமி என்னும் பெண் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. இவர் கருணாக பள்ளி பகுதியில் மீன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் 4-ம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. எனவே, அவரை கானவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
வியாபாரத்தின்
போது துளிர்விட்ட காதல் :
அவரது செல்போன் எண் மற்றும் சிக்னலை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு ஜெயச்சந்திரன் என்ற நபருடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஜெயச்சந்திரனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயச்சந்திரனுக்கும் திருமணம் ஆகி மகன்கள் இருக்கும் நிலையில் அவரும் மீன் வியாபாரம் தான் செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சம்பவ தினத்தில் விஜயலட்சுமி ஜெயச்சந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: நம்பி வந்த பெண்ணை, நண்பனுக்கு விருந்தாக்கிய கயவன்.. பெண்ணின் தந்தை அதிரடி முடிவு.!
பிணத்தின்
மீது தென்னை மரங்கள் :
அப்போது அங்கு ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் இருக்கவில்லை. தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமிக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் இருப்பதாக சந்தேகித்த ஜெயச்சந்திரன் அவருடன் தகராறு செய்து நியாயம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜெயச்சந்திரன் விஜயலட்சுமியை தன் கையாலேயே வெட்டிக் கொன்றுள்ளார்.
அதிர்ந்த
போலீசார் :
அவரது பிணத்தை வீட்டின் பின் பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டு அதன் மேல் 3 தென்ன மரங்களை அவர் நட்டு வைத்துள்ளார். பின்னர் விஜயலட்சுமியின் செல்போனை ஒரு பஸ்ஸில் அவர் தூக்கி போட்டுள்ளார். பாபநாசம் திரைப்பட பாணியில் இந்த கொலையும் அதற்கு பின்னான சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த கொலை வழக்கு போலீஸ்காரர்களுக்கே பெரும் சவாலாக இருந்தது மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. தற்போது ஜெயச்சந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நம்பி வந்த பெண்ணை, நண்பனுக்கு விருந்தாக்கிய கயவன்.. பெண்ணின் தந்தை அதிரடி முடிவு.!