இரவு உணவுக்கு பின் இதை செய்தால், உடல் எடை மளமளவென்று குறையும்.. எப்படி தெரியுமா.?!



after-dinner-these-habits-can-help-to-lossing-weight

இரவு உணவுக்கு பின் செய்யும் தவறுகள்

நமது அன்றாட செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கத்தின் மூலம் உடல் எடையை அடிப்படையாக குறைப்பது தான் ஆரோக்கியமான வழி. இரவு உணவுக்குப் பின் நாம் ஆரோக்கியமற்ற செயல்கள் பலவற்றில் ஈடுபடுகிறோம். இதனால், உடல் எடை அதிகரித்து பெரும் விளைவுகளை சந்திக்கிறோம். 

இரவில் சாப்பிட்டுவிட்டு உடனே சோபாவில் படுத்துக்கொண்டு டிவி அல்லது செல்போனை நோண்டுவது. அசையாமல் இருப்பது ஆகியவற்றால் உடல் எடை அதிகரிக்கும். இரவு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு பசியற்ற நேரங்களிலும் எதையாவது கொறித்து கொண்டு இருப்பது உடலில் கலோரிகளை அதிகரிக்கும். இரவு உணவை சாப்பிட்ட பின் சில செயல்களை செய்து உடல் எடையை குறைக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க. 

இதையும் படிங்க: சருமம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் முள்ளங்கி..! இதில் இவ்வளவு நன்மைகளா?!

ஹெர்பல் டீ

இரவு உணவுக்கு பின் செரிமானத்திற்கு உதவும் வகையில் ஹெர்பல் டீ ஒன்றை அருந்தலாம். லெமன் டீ, மிளகுக்கீரை டீ அல்லது இஞ்சி டீ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் காபின் நிறைந்த பானங்களை சாப்பிடக்கூடாது. இதனால், தூக்கம் கெடும்.

dinner

லேசான உடல் உழைப்பு

இரவு சாப்பிட்ட பின் யோகாசனம் செய்யலாம். இதனால், தசைகள் வலுப்பெறுவதுடன் மன அமைதி கிடைத்து விரைவில் தூக்கம் வரும். செரிமானமும் இலகுவாகும். 15 முதல் 20 நிமிடங்கள் லேசான நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் உடல் உழைப்பு ஏற்பட்டு விரைவில் தூக்கத்தை கொடுக்கும். நல்ல அமைதியான தூக்கத்தையம், பெற முடியும். 

நல்ல தூக்கம்

இரவு உணவு சாப்பிட்டபின் எதையாவது செய்து கொண்டு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது கூட உடல் எடையை அதிகரிக்கும். அன்றாடம் சரியான இடைவெளியில் இரவு உணவுக்கு பின் தூங்கச் செல்வது அவசியம். இரவு 7 முதல் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெண்களே அசத்தல் டிப்ஸ்.. மாதவிடாய் வலியை குறைக்க பழங்கள், காய்கறிகள்.. டிப்ஸ் இதோ.!