சருமம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் முள்ளங்கி..! இதில் இவ்வளவு நன்மைகளா?!



radish-protects-the-skin-and-liver

தினமும் ஒரு முள்ளங்கியை பொரியல் செய்தோ, சாம்பார் அல்லது சாலட் செய்தோ சாப்பிடுவது மிகவும் நல்லது. இது ஒரு நீர் நிறைந்த வேர்க்காய் ஆகும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் 3.91 கிராம் மட்டுமே உள்ளது. மேலும், இதன் கலோரி அளவும் மிகவும் குறைவு தான். இதன் பயன்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

எடைக் குறைத்தல்

எடைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தாராளமாக முள்ளங்கியை உண்ணலாம். நீர் நிறைந்த காய் என்பதால் எடைக் குறைப்பில் முள்ளங்கி பெரும் பங்கு வகுக்கிறது.

இதையும் படிங்க: குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!

சருமத்தை பாதுகாத்தல் :

முள்ளங்கியில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து இருக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜென் உற்பத்தியை அதிகபடுத்தி சருமத்தை மென்மையாகவும், பருக்கள் வராமலும் தடுக்கிறது. அதோடு முள்ளங்கியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் சரும நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

Radish

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துதல் மற்றும் கல்லீரலை பாதுகாத்தல்

முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் கல்லீரை பாதுகாத்து அதை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது. சிறுநீராக பிரச்சனை, மூல நோய் வராமல் தடுக்கிறது.

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும், இது வீக்கம் சம்மந்தப்பட்ட நோய்களை சரி செய்து ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. ஆகையால், முள்ளங்கியை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள்.?! உஷார்.. இது உங்களுக்கு தான்.!