"உசுரு முக்கியம்... " காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!



avoid-these-foods-for-breakfast-doctors-advice

நம் உணவுகளில் மிக முக்கியமானது காலை உணவாகும். ஏனெனில் நம் உடலானது உறக்கத்திலிருந்து விழித்தவுடன் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுவதோடு அனைத்து விதமான சத்துக்களையும் உடலுக்கு கொடுப்பது முக்கியம். எனவே சரிவிகித காலை உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஆனால் நம்மில் பலரும் காலையில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் துரித உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளை காலையில் எடுத்துக் கொள்கிறோம். இது நமது உடல் நலத்தை பாதிப்பததோடு பல்வேறு விதமான நோய்களையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் காலையில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

பொரித்த உணவுகள்

காலை உணவாக பூரி, வடை போன்று எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அஜீரணக் கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படலாம். மேலும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை காலையிலேயே உட்கொள்வதன் மூலம் நம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு உயரும் அபாயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக எண்ணெய் உணவுகள் மற்றும் பொரிக்கப்பட்ட பலகாரங்களை காலை வேளையில் தவிர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

health tips

சர்க்கரை நிறைந்த உணவுகள்

காலையில் அதிகமாக சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் உடல் நலத்திற்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலை உணவாக பேக்கரி தயாரிப்புகள், டோனட், சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. மேலும் இவை தயாரிக்க பயன்படும் மைதா மாவில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. எனவே இது போன்ற உணவுகளை காலை வேளையில் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

இதையும் படிங்க: வாவ்... வேப்பிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா.? ஆச்சரியமளிக்கும் தகவல்.!!

காரம் நிறைந்த உணவுகள்

மேலும் காலை வேளைகளில் காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். காலை வேளையில் நமது வயிறானது மிகவும் உணர்வுத் தன்மை அதிகம் உள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் கார உணவுகளை சாப்பிடும் போது அவை அமில எதிர் வினை ஏற்பட காரணமாக அமைகின்றன. இதனால் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற உடல் பாதைகளுக்கு காரணமாக அமைகிறது. இவை தவிர காபி, பால் பொருள்கள் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றையும் காலை வேலைகளில் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்களும், டயட் நிபுணர்களும் மக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

இதையும் படிங்க: கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை.!