வாவ்... வேப்பிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா.? ஆச்சரியமளிக்கும் தகவல்.!!

தற்காலத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையினால் ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் தலைமுறையினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. இதற்கு மக்களின் அவசர வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் போதுமான உடல் உழைப்பு இல்லாததும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகும்.
நீரிழிவு நோய் மற்றும் அதன் வகைகள்
நீரிழிவு நோய் என்பது நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாகும். நீரிழிவு பாதிப்பானது இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பிற்கும் முக்கிய காரணமாக அமைவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நீரிழிவு நோயானது டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடுமையான நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய மருத்துவம் வேப்பிலையில் இருக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்
வேப்பிலை கிருமி நாசினியாக பயன்படுகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் நம் உடலில் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் வேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. வேப்பிலையில் இருக்கக்கூடிய நிம்போலிட் மற்றும் நிம்பினால் போன்ற வேதி பொருட்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் இவை கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை.!
சர்க்கரையை கட்டுப்படுத்த வேப்பிலையை பயன்படுத்தும் முறை
வேப்பிலையை நன்றாக உலர வைத்து அதனை அரைத்து பொடி செய்து தினமும் காலை வெந்நீரில் கலந்து 30 நாட்கள் குடித்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நன்றாக குறையும். 2011ம் வருடம் ஜர்னல் ஆஃப் எத்நோஃபார்மாலஜி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 30 நாட்கள் வேப்பிலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு சர்க்கரை நோய் 18 லிருந்து 20% குறைந்திருப்பதாக தெரிவித்தது.
இதையும் படிங்க: டீ பிரியர்களே.. உங்களுக்கு தெரியுமா? ஷாக் தகவல் இங்கே.!