என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
சளி பிடித்தால், இலந்தை பழம் சாப்பிடக்கூடாதா.? உண்மை என்ன.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

நம்மில் பெரும்பாலானோர் சளி பிடித்தால் இலந்தை பழம் சாப்பிடக்கூடாது என்று கூறுவதை கேட்டிருப்போம். உண்மையில் இலந்தைப் பழத்தை சளி பிடித்திருக்கும் போது சாப்பிடலாமா? கூடாதா? என்பது பற்றிய முழு தகவல்களையும் பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்
கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைக்கும், இலந்தை பழத்தில் விட்டமின் பி1 ,பி2 ,பி3 மற்றும் விட்டமின் சி, மாங்கனிசு, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை நீக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: இவர்கள் எல்லாம் வெந்தயத்தை சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார்.!
யார் யார் சாப்பிடலாம்?
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இலந்தை பழத்தை சாப்பிடுவது நல்லது. மேலும், இது அதிக எனர்ஜியை கொடுப்பதால் உடல் எடை அதிகம் இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடும் போது இது அவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது. பசியை அடக்கும். இதில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
எப்படி பயன்படுத்தலாம்?
இந்த பழத்தை சிறிய அளவில் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். இலந்தை பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்காது, என்பதால் சீசன் காலத்தில் இதை நன்றாக வெயிலில் காய வைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் கொதிக்க வைத்து கிடைக்காத சீசனங்களில் சாப்பிடுவதால் இதன் சத்துக்களை நாம் பெற முடியும். தோல் நோய் மற்றும் உடலில் ஏற்படும் காயங்களை போக்க இலந்தை பழத்தின் பசையை பயன்படுத்தலாம்.
எந்த பருவத்தில் சாப்பிடலாம்?
அதிகப்படியாக கோடை மற்றும் குளிர்காலங்களில் தான் இலந்தை பழம் கிடைக்கிறது. இதில் தாகத்தை தணிக்க கூடிய சக்தி இருக்கிறது. சளி பிடித்திருக்கும்போது இலந்தை பழத்தை நேரடியாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ஈரப்பதத்துடன் இருக்கும் இலந்தை பழத்தை சாப்பிடாமல் அதனை காய வைத்து பொடியாக மாற்றி அதை வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். இதனால் சளி பிடிக்கக்கூடிய தன்மை மாறிவிடும். அதிகப்படியாக சளி இருப்பவர்கள் மற்றும் சைனஸ் உள்ளிட்ட தொந்தரவு இருப்பவர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு இந்த இலந்தை பழத்தை சாப்பிடலாம்.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் இதை செய்ய மறந்துடாதீங்க..!