#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!



CBI File FIR Against Actor Vishal Sister's Husband

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவரின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா. ஐஸ்வர்யாவின் கணவர் கிரித்திஷ். தம்பதிகளுக்கு கடந்த 2019ல் திருமணம் நடந்து முடிந்து, இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். 

இதனிடையே, விஷாலின் தங்கை கணவர் மீதும், அவர் நடத்தி வரும் உம்மிடி பங்காரு ஜுவல்லரசுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், ஆவணங்கள் கொடுத்து ரூ.5.5 கோடி கடன் பெற்றுள்ளனர். 

vishal

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை

ஆவணங்களை சோதனை செய்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, வீட்டுக்கடன் மையத்தில் பணியாற்றி வரும் சத்தியநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மோசடி குறித்து சிபிஐ விசாரணை செய்ய மனுதாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: தொடங்கியது கோடை! வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக உம்மிடி கிரித்திஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்; கீவி பழத்தின் அசத்தல் நன்மைகள்.!