தொடங்கியது கோடை! வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!



VELLARIKAAI BENEFITS IN TAMIL

கோடை காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தால் நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். இதனை ஈடு செய்ய பல இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். 

வெள்ளரிக்காயில் இருக்கும் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவை உடலுக்கு நன்மை செய்கிறது. அதேபோல, வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. 

அதன் வைட்டமின் கே உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது அல்லது அதனை சாறாக பருகுவது கோடைகாலத்தில் தாகத்தை தணிக்க உதவி செய்யும். 

இதையும் படிங்க: ஆவாரம்பூ பொடியில் இவ்வுளவு நன்மைகளா? அசத்தல் டிப்ஸ் இங்கே.!

health tips

வைட்டமின் சி, நீர்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், கால்சியம் சத்துக்களை உடம்புக்கு கிடைக்க வழிவகை செய்யும். நமது கண்களில் ஏற்பட்டுள்ள கருவளையம் பிரச்சினை சரியாகும். சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். 

உடலில் இருக்கும் கொழுப்பு செல்கள் சரி செய்யப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படும். செரிமான மண்டலத்தில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். உடல் வறட்சி தடுக்கப்படும். நுரையீரலில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

இதையும் படிங்க: தேவையற்ற கொழுப்புகளை சீர்செய்யும் வெண்டைக்காய்.. நன்மைகள் என்னென்ன?