காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்போர் பட்டாசுகளை வெடிக்கலாமா?.. மருத்துவர்கள் கூறுவது என்ன?



Contact Lens persons Should Be Careful While Cracking Fireworks 

 

2024 தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் 1 நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில், பட்டாசுகளை வெடிக்கும்போது நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக கண்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் பட்டாசுகள் வெடிக்கும்போது, அவை சிலநேரம் நம்மீது பட வாய்ப்புகள் உண்டு. இதனால் காயங்கள் கூட ஏற்படலாம். 

இதையும் படிங்க: சுரைக்காயில் இப்படி செய்து சாப்பிட்டுள்ளீர்களா?.. ருசித்து சாப்பிட அசத்தல் டிப்ஸ்..!

கவனமாக செயல்பட அறிவுறுத்தல்

குறிப்பாக மத்தாப்பு, சங்கு சக்கரம், பொறிவானம் போன்றவை கண்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். வெடிபொருட்களில் இருக்கும் வேதிப்பொருட்கள் காரணமாக காயம் ஏற்பட்டால், அவை சரியாக மிகுந்த நாட்கள் ஏற்படும். 

Eye

அதேபோல, அதன் வெப்பம் கண்ணாடியை உருக்கும் சக்தி கொண்டது. மத்தாப்பு சருமத்தின் மூன்றாம் நிலை காயத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் காயத்தின் தன்மை காரணமாக எரிச்சல், விழிப்படல சிராய்ப்பு போன்றவை பார்வை இழப்புக்கும் வழிவகை செய்யும். 

இரண்டு மடங்கு கவனம் தேவை

காண்டாக்ட் லென்சுகள் அணிந்து இருப்போர், நீண்ட நேரம் நேரடி பட்டாசுகளின் வெப்பத்தில் இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதனால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருப்போர், இரண்டு மடங்கு கவனத்துடன் செயல்படுவது நல்லது. 

கண்களில் காயம் ஏற்பட்டால் உடனடியாக கண்களை தேய்க்க, கசக்க கூடாது. கண் இமைகளை திறந்து, தொடர்ந்து நீரால் அதனை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். வலி நிவாரணி மருந்தை சுயமாக பயன்படுத்த வேண்டாம். கண்களை நீரால் சுத்தம் செய்து, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.