சுரைக்காயில் இப்படி செய்து சாப்பிட்டுள்ளீர்களா?.. ருசித்து சாப்பிட அசத்தல் டிப்ஸ்..!



How to prepare Suraikai Recipe 

 

காய்கறிக்கடையில் எளிதில் கிடைக்கும் சுரைக்காய், சிறுநீரை அதிகம் வெளியேற்றி உடல் நலனை பாதுகாக்கும் மருந்து ஆகும். இது பெண்களுக்கான இரத்த சோகை பிரச்சனையை நிவர்த்தி செய்யும் தன்மையும் கொண்டது. அதேபோல, குடல் புண்களை சரிசெய்தல், மூலப்பிரச்னைக்கு அருமருந்து, இரத்தத்தை சுத்தம் செய்தல் என பலவகை நன்மைகளை தருகிறது. இன்று சுரைக்காயில், சற்று வித்தியாசமாக  சுரைக்காய் பாகாலாபாத் செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். 

சுரைக்காய் பாகாலாபாத் செய்ய தேவையான பொருட்கள்

சுரைக்காய் நறுக்கியது - 2 கப், 
தயிர் - 1 கப், 
பச்சை திரைட்ஸை - 1/2 அப், 
மாதுளை - 1/2 கப், 

இதையும் படிங்க: கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா.! உடனே இதை செய்யுங்கள்.! 

தாளிக்க

கடுகு-உளுந்து - 1 கரண்டி,
பெருங்காயத்தூள் - 1/2 கரண்டி,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 3, 
கறிவேப்பில்லை - சிறிதளவு, 
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

சுரைக்காய் பாகாலாபாத் செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் சுரைக்காயை வேனெலியில் இட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் தயிருடன் சுரைக்காய், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின் வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். 

இதனுடன் சுரைக்காய் கலவையை சேர்த்து சிறிது வதக்கி, இறுதியாக கொத்தமல்லித் தழைகள், திரட்சியா, மாதுளை ஆகியவற்றை சேர்த்து கிளறினால் சுவையான சுரைக்காய் பாகாலாபாத் தயார். 

இதனை வெறும் வாயிலும் சாப்பிடலாம், சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.