வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!
மாறிப்போன வாழ்க்கை முறை
சமீப காலமாக உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. பிறந்த குழந்தையிலிருந்து ஒபிசிட்டி என்ற இந்த பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நமது உணவு முறையும், வாழ்க்கை முறையும் தான் பெருமளவு காரணம். அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.
சீரகத்தண்ணீர்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து, நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 10 கிலோ அளவு எடையை குறைக்க கூடிய சக்தி சீரக தண்ணீருக்கு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இதையும் படிங்க: இரவு உணவுக்கு பின் இதை செய்தால், உடல் எடை மளமளவென்று குறையும்.. எப்படி தெரியுமா.?!
இரவிலேயே அதிக நன்மை
சீரகத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சீரக நீர் எடையை கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது. காலை நேரத்தில் சீரக நீரை குடிப்பதை விட இரவு நேரத்தில் குடிப்பது தான் அதிக பயன்களை நமக்கு தருகிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதை இது தடுக்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை சீரக நீர் வெளியேற்றி உடல் எடை வேகமாக குறைய உதவும். வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க சீரகம் சிறப்பாக செயல்படுகிறது.
உடல் எடையை எப்படி குறைக்கும்.?
மேலும், மலச்சிக்கல் பிரச்சனையை சீரக தண்ணீர் குறைக்க உதவுகிறது. இந்த தண்ணீர் உடலில், இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி தோல் மற்றும் முக அழகை அதிகரிக்கவும் உதவுகிறது. காலை வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால், நமது அழகு மேம்படும். ஆனால், உடலில் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க: இரவில் பால் குடித்தால் உடல்கெட்டு விடுமா.? மருத்துவர்கள் கூறுவது என்ன.?!