கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா.! உடனே இதை செய்யுங்கள்.! 



blackheads-in-neck-are-the-symptoms-of-diabetics

சில நபர்களுக்கு கழுத்தில் கருப்பாக திட்டுக்கள் இருக்கும். இது அழுக்கு என்று நினைத்து பலரும் சாதாரணமாக புறக்கணித்து விடுவார்கள். இதற்கு சில தீவிர காரணங்கள் இருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா? கழுத்து பகுதி கருப்பாக இருப்பது உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை குறிக்கிறது. இது தீவிரமான சில நோய்களின் அறிகுறி ஆகும். 

சர்க்கரை நோயின் அறிகுறி :

சரியான நேரத்தில் சிகிச்சையை தொடங்க அதனை புரிந்து கொள்ள வேண்டும். கழுத்துப் பகுதியில் இருக்கும் கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கு ஒரு நேரடி அறிகுறியாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து கொண்டு இருப்பதை இந்த கருப்பு திட்டு குறிக்கிறது.

Diabetics

இதையும் படிங்க: அரைக்கீரையின் அற்புத நன்மைகள்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இவ்வாறு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படும். இதனால் தான் கழுத்து பகுதி கருப்பாக மாறத் துவங்குகிறது. இது நீரிழிவு நோயை கண்டறியும் ஒரு பொதுவான அறிகுறி ஆகும.  குழந்தை பருவத்தில் இருந்து இது தோன்றும். 

செய்யவேண்டியவை

எனவே, இவ்வாறு அறிகுறி தென்பட்டால் உணவில் சர்க்கரையின் அளவை குறைப்பதுடன் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது மிக நல்லது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். 

அன்றாடம் நடை பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். 

தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். 

பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது. 

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கழிவறையில் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்கிறீர்களா? அலர்ட் விடுக்கும் மருத்துவர்கள்.!