கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
பேனர் வைக்கும் பணியில் சோகம்; மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டன், ராஜபதி கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரின் மகன் பேச்சிமுத்து (வயது 30). இவர் விளம்பர பேனர் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் பாளையங்கோட்டை, இரயில்வே கேட் பகுதியில் விளம்பர பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ராஜபதியுடன் சதிஷ் முருகன் (30) என்பவரும் வேலை செய்து வந்தார். இருவரும் பேனர் வைக்கும்போது, அதனை வேறு இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மின்சாரம் தாக்கி பலி
அச்சமயம், பேனரில் இருந்த கம்பி, மின்கம்பியுடன் உரசியது. இதனால் இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் அன்று இப்படியா நடக்கணும்? 21 வயது கல்லூரி மாணவர் பலி.. இருசக்கர வாகன பயணத்தில் சோகம்.!
உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு பேச்சிமுத்துவின் உயிரிழப்பு உறுதி செயப்பட்டது. மேலும், சதிஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் இரயில் மீது கல்வீசி தாக்குதல்; நெல்லையில் அதிர்ச்சி..!