வந்தே பாரத் இரயில் மீது கல்வீசி தாக்குதல்; நெல்லையில் அதிர்ச்சி..!



in Tirunelveli Vande Bharat Express Glass Stone Pleading

திருநெல்வேலி இரயில் நிலையத்தில் இருந்து, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு தென்னக இரயில்வே சார்பில் வந்தே பாரத் அதிவிரைவு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த இரயில் நேற்று காலை வழக்கம்போல, நெல்லையில் இந்து சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது, கடம்பூர் பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம், இரயில் கேட் பகுதியில் இரயிலின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

tirunelveli

ஜன்னல் உடைப்பு

அச்சமயம், இரயிலின் சி1 பெட்டியில், ஜன்னல் கண்ணாடி உடைந்துபோனது. இதனால் இரயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: கடையில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆபாச பேச்சு.. உரிமையாளர் அதிரடி கைது.!

நல்வாய்ப்பாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விஷயம் குறித்து இரயில் எஞ்சின் ஓட்டுநர் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், கற்களை வீசிய மர்ம நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர்.  
 

இதையும் படிங்க: மாரடைப்பால் உயிரிழந்த தாய்; துக்கத்திலும் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்.!