தங்கக்கடத்தல் குருவியாக நடிகை.. கிடுக்குபிடிக்கு தயாராகும் அமலாக்கத்துறை..!
8 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில், ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஐயப்பன் (வயது 52). இவர் வேலை பார்த்து வரும் பள்ளியில், 13 வயதுடைய சிறுமிகள் இருவர், எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளனர்.
இதனிடையே, ஐயப்பன் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
போக்ஸோவில் ஆசிரியர் கைது
இதன்பேரில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், மாணவிகளுக்கு ஐயப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்; திருமணமான 26 வயது நபரின் அதிர்ச்சி செயல்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: "மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.!