#Breaking: சரிந்துவிழுந்த 5 மாடி கட்டிடம்..! 200 பேரின் கதி என்ன.? ஒருவர் மரணம்.. தொடரும் மீட்புப்பணி..!



1-dead-many-feared-trapped-after-multi-storey-building

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று சரிந்துவிழுந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் மஹட் பகுதியில் அமைத்துள்ள கர்கான் மொஹாலா என்ற இடத்தில் அமைந்திருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகியுள்ளது. 47 குடியிருப்புகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் சுமார் 250 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடத்தின் தூண்கள் இன்று மாலை 6 மணியில் இருந்து  நடுங்கத் தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு பன்வெலின் கோஹினூர் டெவலப்பர்களால் கட்டப்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த திடீர் விபத்தில் கட்டிடத்தில் இருந்த 200கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தேசிய மீட்டுப்படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த திடீர் விபத்து அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.