திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாட்டியுடன் வாசலில் விளையாடிய குழந்தை..! பைக்கில் வந்த மர்ம நபர்கள்..! நூதன முறையில் ஏமாற்றி குழந்தையை கடத்திய சம்பவம்.!
வீட்டு வாசலில் 11 மாத ஆண் குழந்தையுடன் அமர்ந்திருந்த வயதான பாட்டி ஒருவரை ஏமாற்றி மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சிங்கம்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் துர்கேஷ் - மல்லவ்வா தம்பதியினர். இவர்களுக்கு ஹரிஷ் என்ற 11 மாத ஆண் குழந்தை ஓன்று உள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை பெற்றோர் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் குழந்தை பாட்டியுடன் இருந்துள்ளது.
வீட்டு வாசலில் குழந்தை விளையாடிக்கொண்டிருக்க பாட்டி அருகில் நின்று கண்காணித்துவந்துள்ளார். இந்நிலையில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மக்கள் தொகை கணக்கெடுக்க வந்திருப்பதாக பாட்டியிடம் கூறி, ஆதார் அட்டையை காண்பிக்குமாறு மூதாட்டியிடம் கேட்டுள்ளனர்.
ஆதார் அட்டையை எடுக்க பாட்டி உள்ளே சென்றதும் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 11 மாத குழந்தை ஹரிஷை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர். வெளியே வந்த பாட்டி குழந்தை இல்லாததை பார்த்து அலறி துடித்துள்ளார்.
குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.