திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட 34 வயது பெண்.!! படுகாயங்களுடன் மீட்ட காவல்துறை.!!
தலைநகர் டெல்லியில் 34 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
படுக்காயங்களுடன் சாலையில் கிடந்த இளம் பெண்
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியின் பிரதான சாலையில் 34 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்திருக்கிறார். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற கடற்படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த பெண் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தோழியின் வீட்டிலிருந்து வெளியேறிய பெண்
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண் குறித்த விசாரணையில் இறங்கினர். இதனையடுத்து காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் டெல்லிக்கு வந்த அவர் தனது தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் தோழியுடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார் அந்த பெண்.
இதையும் படிங்க: மழலையர் பள்ளியில் பயங்கரம்... 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்.!! ஊழியர் கைது.!!
கூட்டு பலாத்காரம்
தோழியின் வீட்டிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையில் இருந்திருக்கிறார். அப்போது இதனை கவனித்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் படுகாயமடைந்த பெண்ணை சாலையில் வீசி விட்டுச் சென்றது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சல்மான் கழுத்துக்கு நெருங்கும் கத்தி.. காரணம் என்ன?.. பாஜக முக்கியப்புள்ளி பகீர் தகவல்.!