திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மழலையர் பள்ளியில் பயங்கரம்... 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்.!! ஊழியர் கைது.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மழலைப் பள்ளியில் 3 வயது குழந்தை படித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தையின் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
பள்ளி ஊழியர் கைது
இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பள்ளியின் ஊழியர் ஒருவர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சல்மான் கழுத்துக்கு நெருங்கும் கத்தி.. காரணம் என்ன?.. பாஜக முக்கியப்புள்ளி பகீர் தகவல்.!
கேள்விக்குறியாகும் குழந்தைகளின் பாதுகாப்பு
சமீப காலமாக பள்ளிக்கூடம், பள்ளி வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேம்படுத்த அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: பெண்ணின் தலைக்குள் பாய்ந்த தண்ணீர் தொட்டி; ஆப்பிள் சாப்பிட்ட ஆன்டியை அதிரவைத்த சம்பவம்.!