மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! சடலமாக மீட்பு.!! 50 வயது நபருக்கு வலை.!!
மேற்குவங்க மாநிலத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சிறுமியை கற்பழித்து கொன்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காணாமல் போன 7 வயது சிறுமி
மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி நகரத்தில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி விளையாட சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்களது புகாரைத் தொடர்ந்து காவல்துறை சிறுமியை தீவிரமாக தேடி வந்தது.
சடலமாக மீட்பு
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 7 வயது சிறுமியின் சடலம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சடலம் தொடர்பாக நடத்திய விசாரணையில், சடலமாக கிடைத்தது காணாமல் போன சிறுமி என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: விபூதி அடித்த காதலன்... தட்டி கேட்ட மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
கற்பழித்து கொலை
பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் சிறுமியை கடத்தி, கற்பழித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் சிறுமியை கொலை செய்துவிட்டு நேபாள நாட்டிற்கும் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து தப்பிச்சென்ற நபரை பிடிக்க மேற்கு வங்க காவல்துறை தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் பக்கா ஸ்கெட்ச்.!! கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.!! மகள் வைத்த டிவிஸ்ட்.!!