53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
விபூதி அடித்த காதலன்... தட்டி கேட்ட மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
ஆந்திர மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட காதல் காரணமாக கல்லூரி மாணவர் தனது முன்னாள் காதலியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆடைகள் தீப்பற்றி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிய பெண் ஒருவர் அலறி துடித்த படி ஓடி வந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தஸ்தகிரிம்மா(18) என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த மாணவி அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் அதே கல்லூரியில் பயிலும் விக்னேஷ்(20) என்ற நபரை காதலித்திருக்கிறார். இந்நிலையில் விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் இந்தப் பெண்ணை விட்டு விலகி இருக்கிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் பக்கா ஸ்கெட்ச்.!! கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.!! மகள் வைத்த டிவிஸ்ட்.!!
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து கொலை
இதன் காரணமாக விக்னேஷ் மற்றும் தஸ்தகிரிம்மா ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத தேசிய நெடுஞ்சாலைக்கு தனது முன்னாள் காதலியை அழைத்துச் சென்ற விக்னேஷ் அவரது ஆடையில் சிகரெட் லைட்டரால் தீப்பற்ற வைத்து கொலை செய்ய முயன்று இருக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி தஸ்தகிரிம்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.!! 17 வயது சிறுமி கற்பழிப்பு.!!