மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டியூசன் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 18 வயது இளைஞர் கைது.!!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான சிறுமி சடலமாக மீட்பு
மேற்குவங்க மாநிலமான கொல்கத்தாவில் உள்ள ஜாய் நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டியூசன் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடி வந்த நிலையில் இரவு 9 மணிக்கு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலவரம்
சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். குழந்தை காணாமல் போனது குறித்து புகார் அளித்தும் காவல்துறை கால தாமதம் செய்ததாக கூறிய அவர்கள் ஜாய் நகர் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கினார். மேலும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; கட்டையை எடுத்து வந்து கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்.!
விசாரணையில் வெளியான உண்மை
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முஸ்தகின் சர்தார் என்ற 18 வயது நபரை கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த நபர் குழந்தையை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் குழந்தையின் உடல் கிடந்த இடத்தையும் காவல்துறைக்கு அடையாளம் காட்டியிருக்கிறார். இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல் துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்பே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா.? என்பது தெரியவரும் என கூறி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: என் கூட படுக்கைக்கு வாங்க டீச்சர்.. டியூசன் போன இடத்தில் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. கூண்டோடு கைது.!