பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
#Watch: "என் போனை விடு" - சிறுமியின் கைகளில் இருந்து செல்போன் பறிப்பு.. இரயில் பயணத்தில் பகீர்.!
இரயில் இயக்கத்தை தனக்கு சாதகமாக்கி நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இரயில் பயணங்களின் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான விசயத்திற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும், அதிகாரிகளின் பாதுகாப்பை மீறியும் சில இடங்களில் திருட்டு, வழிப்பறி தொடர்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் ஜன்னல் ஓரம் இருப்பவர்கள், கதவு வழியாக வீடியோ ஈடுபவர்களை குறிவைத்து, இரயிலின் மெதுவான இயக்கத்தை கண்காணித்து திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
சிறுமியின் செல்போன் பறிப்பு
இதனிடையே, அசாமில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவரும் காணொளி ஒன்றில், இரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும் சிறுமியின் கைகளில் இருக்கும் செல்போனை மர்ம நபர் பறித்துச் செல்லும் பதறவைக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
வேறொரு விசயத்திற்கு வீடியோ எடுத்த பயணியின் செல்போனில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டதா? என்ற விபரமும் இல்லை. அவை குறித்த தகவல் சேகரிக்கப்படுகிறது. தற்போது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரயில், பேருந்து போன்ற பயணங்களில் ஈடுபடுவோர் கவனமாக இருக்க வேண்டியதனை இந்த காணொளி அறிவுறுத்துகிறது.
நரேந்திராவின் ஆட்சியில் ரயில்வே துறையின் பாதுகாப்பு இலட்சணம்?
— ARUN M M (@kalaingarism) December 14, 2024
இந்த அழகுள்ள ஆட்சி பண்ணிட்டு தான் நீங்க இவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கீங்க? pic.twitter.com/v5rBgvrNmG
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... ஒரு தலை காதல் கொடூரம்.!! 17 வயது சிறுமி எரித்து கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!