#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மணிப்பூர் பெண்களுக்கு நடந்தது சமூகத்திற்கே அவமானம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் துன்புறவு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்துள்ளதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அவர் மீது விமர்சனங்கள் பாய்ந்தது. அதன் பின் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்து இருந்தார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் தற்போது மக்களவை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த சம்பவம் துரதிஷ்டவசமாக நிகழ்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.