திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தையை கொலை செய்த மகள்? அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பணிஓய்வு வயதில் நடந்த கொடூரம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலலத்தில் உள்ள மதனப்பள்ளி மாவட்டம்,மேல் குரவங்கா பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி. இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜூன் 30 அன்று ஓய்வுபெறவிருந்துள்ளார். இவரின் சொந்த ஊர் சித்தூர் மாவட்டம், சதும் அருகேயுள்ள கிராமம் ஆகும். தற்போது வேலைக்காக வந்து மதனப்பள்ளியிலேயே சொந்தமாக வீடு இருக்கிறது.
இந்நிலையில், துரைசாமியின் மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் துரைசாமி தனது மகள் ஹரிதாவுடன் வசித்து வருகிறார். ஹரிதா பி.இ.டி பயின்று இருக்கிறார். இதனிடையே, தந்தை - மகள் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!
வரன் பார்த்து வந்ததால் ஆத்திரம்?
ஹரிதாவை வரன் பார்த்து திருமணம் செய்து கொடுக்க தேவையான ஏற்பாடுகளை துரைசாமி மேற்கொண்டு வந்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத ஹரிதா, தனது தந்தையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று நடந்த சண்டையில் மகள் ஹரிதா தந்தை துரைசாமியை சப்பாத்தி கட்டை மற்றும் இரும்பு கம்பி கொண்டு அடித்துக்கொலை செய்துள்ளார்.
பின் தந்தை தவறி விழுந்து காயமடைந்ததாக அக்கம் பக்கத்தில் கதறி, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் துரைசாமியின் மரணத்தை உறுதி செய்ததைத்தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பல கோணங்களில் தொடரும் விசாரணை
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துரைசாமியின் மாமா மகனிடம் இருந்தும் சந்தேக மரணம் என்ற புகாரை பெற்றுள்ளார். அந்த புகாரில், ஹரிதா வேறொருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்காக பலமுறை நிதி சார்ந்த உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஹரிதா ரூ.80 இலட்சம் மதிப்புள்ள மதனப்பள்ளி வீட்டை தந்தையின் பெயரில் இருந்து சமீபத்தில் தனது பெயருக்கு சண்டைகள் செய்து மாற்றிக்கொண்டார் எனவும் கூறியுள்ளார்.
இதனால் சொத்துக்காக மகள் தந்தையை அடித்து கொலை செய்தாரா? திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நடந்த கொலையா? வேறு காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. ஹரிதாவின் காதலர் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊழலை எதிர்த்ததால் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்; உ.பி-யில் பயங்கரம்.!