மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊழலை எதிர்த்ததால் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்; உ.பி-யில் பயங்கரம்.!
ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகம் முதல் கல்லறை வரை இலஞ்சம், ஊழல் என்பது தலைவிரித்து ஆடுகிறது. அரசு அலுவலகத்தில் கொள்ளையடிக்கும் அதிகாரிகளை போல, அரசியல் கட்சியினரும் அரசின் திட்டங்களில் முறைகேடு செய்வதை தொடருகின்றனர். இவ்வாறான குற்றங்களை குறைக்க, இலஞ்சம் மற்றும் மோசடி புகார்களில் சிக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிசார்பூர் மாவட்டம், தாள்கன்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் குமார் மௌரியா. இவர் லால் கஞ்ச் கோத்தி கிராமத்தில் பஞ்சாயத்து மித்ராவாக வேலை பார்த்து வருகிறார். இதே ஊரைச் சார்ந்தவர் பிரதான் ராம் நரேஷ் மவுரியா.
ஊழலை கண்டறிந்து கைவிடுமாறு கோரிக்கை
இவர் அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டம் ஒன்றில் முறைகேடு செய்து அதன் மூலமாக வருவாய் ஈட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை கண்டறிந்த ராஜூகுமார், பிரதானை கண்டித்து அந்த செயலை கைவிடுமாறு கூறியுள்ளார். மேலும், அது சார்ந்த பணிகளையும் முன்னெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அண்ணியை கரம்பிடித்த கொழுந்தன்; ஆத்திரத்தில் சொந்த தம்பியை போட்டுத்தள்ளிய பாசக்கார சகோதரர்கள்.!
இந்த விஷயம் தொடர்பாக ராஜூகுமார் மற்றும் பிரதான் ராம் நரேஷ் இடையே தகராறு எழுந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று ராம் நரேஷ் தனது உறவினர்கள் தினேஷ் மவுரியா, சிவகுமார், சந்தோஷ் குமார் மவுரியா, பிரமோத் உட்பட ஐந்து பேருடன் சேர்ந்து ராஜீவ் குமாரை கார் ஏற்றி கொலை செய்திருக்கிறார்.
கார் ஏற்றி நடந்த பயங்கரம்
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜகுமாரின் மரணத்திற்கு பின்னணியில் உள்ள தகவல் தெரிய வரவே, மேற்கூறிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை கார் ஏற்றி இவர்கள் கொன்றது அம்பலமாகி இருக்கிறது.
ஊழலை எதிர்த்ததால் நபர் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவன்; காதல் திருமணமான 7 மாதத்தில் கொடூரம்.!