மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமாதானம் பேசவந்த கணவனின் நாக்கை லிப்லாக் அடித்து கடித்து துப்பிய மனைவி.. என்னம்மா இப்படியெல்லாம் இறங்கிடீங்க??.!
கணவருடன் கோபித்துக்கொண்டு வந்த மனைவியை, மாமியாரின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்ய முயற்சித்த கணவனின் நாக்கு மனைவியால் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தாகூர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இதே பகுதியை சேர்ந்த பெண் சல்மா. இவர்கள் இருவரும் திருமணம் திருமண செய்து வாழ்ந்து வந்த நிலையில், கணவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் சல்மா குழந்தையோடு தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சில நாட்களில் சமாதானமடைந்த முன்னா, தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத சல்மா, கணவரை கண்டும் காணாது இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த ஜனவரி 27ல் முன்னா மாமியாரின் வீட்டிற்கு சென்று குழந்தைகளோடு விளையாடி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மா கணவரிடம் குழந்தைகளை சந்திக்க வரக்கூடாது என கண்டித்துள்ளார். அப்போது, என்னுடன் குடும்பம் நடத்த வா என முன்னா மனைவியை அழைக்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் முன்னாவை அடித்து நொறுக்கிய சல்மா, கணவரின் மீது பாய்ந்து நாக்கை பற்களால் கடித்து துப்பினார்.
இதில் முன்னாவின் நாக்கு துண்டாகி இரத்தம் வெளியேறி அலறித்துடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், முன்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சல்மாவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.