மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் நாயின் மீது ஆட்டோவை ஏற்றிய ஓட்டுநர்; நொடிப்பொழுதில் இன்ஸ்டன்ட் கர்மா.. துள்ளத்துடிக்க அதே இடத்தில் சாவு.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் தனது ஆட்டோவில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
சவாரி ஏதும் இல்லாத நிலையில், அவர் தனியே பயணித்தார். அச்சமயம் சாலையின் நடுவே நாய் ஒன்று படுத்து இருந்தது. வாகனங்கள் செல்லும் பகல் நேரத்தில் நாய் நடுரோட்டில் உறங்கியது.
இதையும் படிங்க: லாரி மீது டூவீலர் மோதி பயங்கர விபத்து; தலை பிளந்து, மூளை சிதறி 3 இளைஞர்கள் பலி.! அதிவேகத்தில் சோகம்.!
அப்போது, அவ்வழியாக தனது ஆட்டோவில் பயணம் செய்த வாகன ஓட்டி, ஆட்டோவை தொடர்ந்து நாயை நோக்கி இயக்கினார். நடுரோட்டில் இருக்கும் நாயும் எழுந்து செல்ல முன்வரவில்லை.
ஓட்டுனரும் தனது வேகத்தை கட்டுப்படுத்தி, வாகனத்தின் திசையை சற்று மாற்றி பயணம் செய்ய முன்வரவில்லை. இதனால் வந்த வேகத்தில் நாயின் மீது ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை செலுத்தி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் ஆட்டோ குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது. ஆட்டோவில் இருந்து தவறி வீழ்ந்த ஓட்டுனரின் மீதே ஆட்டோவின் சக்கரங்கள் ஏறி-இறங்கின. தலையில் படுகாயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: அதிகாலையில் நடந்த கோரவிபத்து.! துடிதுடித்து பரிதாபமாக பறிபோன 18 உயிர்கள்.! பகீர் சம்பவம்!!