அதிகாலையில் நடந்த கோரவிபத்து.! துடிதுடித்து பரிதாபமாக பறிபோன 18 உயிர்கள்.! பகீர் சம்பவம்!!



accident-in-up-18-passengers-dead

ஆக்ரா - லக்னோ அதிவிரைவு சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோர விபத்து நடந்துள்ளது. அதாவது இன்று அதிகாலை பீகார் மாநிலம் மோதிஹாரியில் இருந்து டெல்லி நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது கர்ஹா கிராமத்தின் அருகே பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

18 பேர் பரிதாப பலி 

இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 19 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் டூவீலரில் பயணம்.. சாலையோர டிவைடர் நெஞ்சில் சொருகி இளைஞர் பரிதாப பலி.!

உபி முதல்வர் இரங்கல் 

இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தறிகெட்டு காரை இயக்கிய எம்.எல்.ஏ மருமகன்; 19 வயது இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!