#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மணிப்பூர் விவகாரம்; விவாதம் செய்ய மத்திய அரசு தயார்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்.!
மணிப்பூரில் நடைபெற்ற கலவரங்களுக்கு மத்தியில், இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பகீர் சம்பவம் நடைபெற்றது. நிஅது தொடர்பான குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மணிப்பூர் விவகாரம் இந்திய அளவில் பெரும் கண்டனத்தை குவித்து வருகிறது. மணிப்பூரை போல மேற்கு வங்கம் மாநிலத்திலும் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமாக பெண்கள் கும்பலால் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அரசியலாக வேண்டாம் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதாம் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.