திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
17 வயது சிறுமி பிறந்தநாளில் காதலனால் பலாத்காரம்.. இரத்தம் வெளியேறி துள்ளத்துடிக்க கரும்புத்தோட்டத்தில் உயிரிழந்த பரிதாபம்..!

தனது காதலியை பிறந்தநாளில் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த காதலனின் கொடூரத்தால், சிறுமி இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஜஹண்டே மஜ்ரா கிராமம், குராளி பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக 25 வயதுடைய முள்ளாண்பூர் பகுதியை சேர்ந்த குரஸேவக் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை குரேஸ்வக் காதலாக மாற்றி, சிறுமியை காதலிப்பதாக நடித்துள்ளார். சிறுமியின் செயல்பாடுகளில் இருந்த மாற்றத்தை அறிந்த அவரின் தந்தை, மகளின் காதல் விவகாரத்தை கண்டறிந்து படிப்பை பாதியில் கைவிட வைத்துள்ளார். இதனால் சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளன்று காதலனை சந்திக்க அவர் சென்ற நிலையில், காதலன் குரஸேவக் சிறுமியை அழைத்துக்கொண்டு தபாவுக்கு சென்று இருவரும் சாப்பிட்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்து தனிமையான இடத்திற்கு இருவரும் புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு காதலன் ஆசைகாண்பித்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமிக்கு உதிரப்போக்கு அதிகரித்து மயங்கி இருக்கிறார்.
என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கிய கொடூரன், சிறுமி மயங்கி இறந்துவிட்டதாக எண்ணி அவரின் உடலை கரும்பு தோட்டத்தில் போட்டுவிட்டு காரில் தப்பி சென்றுள்ளான். சிறுமியை காணாது தேடியலைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுமி உயிரிழந்த பின்னர் உடலை மீட்டனர். அவரின் காதலன் குரேஸ்வக்கை கைது செய்து நடத்திய விசாரணையில் சிறுமியிடம் காதல் பெயரில் அத்துமீறியதும், அப்போது அதிக இரத்தப்போக்கால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் மயங்கியதை இறந்துவிட்டதாக எண்ணி கரும்பு தோட்டத்தில் அவரை வீசி சென்றுள்ளான்.
இதனால் சிறுமி நீண்ட நேரம் உயிருக்கு போராடி இரத்தப்போக்கு தொடர்ந்து அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்து இருகிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, போக்ஸோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கயவன் குரேஸ்வக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.