திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
ஆட்டோ மோதி மருத்துவர் படுகாயம்: 19 நாட்கள் உயிருக்கு போராடி மரணித்த துயரம்.. அதிர்ச்சியூட்டும் விபத்து வீடியோ.!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சண்டிகர், செக்டர் 16 - 17 சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி மருத்துவர் லக்ஹவிந்தர் சிங் என்பவர் தனது நண்பருடன் சைக்கிளிங் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, அவருக்கு பின்னால் வந்த ஆட்டோ, திடீரென வேகமாக வந்து மருத்துவர் மற்றும் அவரின் நண்பர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லக்விந்தரின் நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். ஆனால், மருத்துவர் லக்விந்தர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார்.
கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய மருத்துவர், இன்று பரிதாபமாக 19 நாட்கள் கடந்து உயிரிழந்தார். அவரின் மறைவு சக மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.
Shocking : Doctor Lakhwinder Singh lost his life in an accident while cycling near Sector 16-17 in Chandigarh on the morning of September 11th. An auto coming at high speed hit him from behind, and both he and his friend suffered serious injuries. Sadly, Doctor Lakhwinder… pic.twitter.com/1JgBrJRuWR
— Gagandeep Singh (@Gagan4344) September 30, 2023