மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: "வயநாடு தொகுதி வேண்டாம்., ரேபரேலி போதும்" - காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு.!
2024 மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தே.ஜ.க கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 240 தொகுதிகளில் வெற்றியடைந்து மீண்டும் எதிர்க்கட்சியாக பணியாற்றவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இருந்து மீண்டும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பல எதிர்பாராத திருப்பங்களை அளித்து எதிர்கட்சிக்கு வெற்றி இல்லாத கொண்டாட்டத்தை பரிசாக அளித்த 2024 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் களம்கண்டார். தேர்தல் முடிவுகளின்படி 2 தொகுதியிலும் அவர் வெற்றி அடைந்தார். சமீபத்தில் வயநாடு சென்ற ராகுலுக்கு மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தையை கொலை செய்த மகள்? அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பணிஓய்வு வயதில் நடந்த கொடூரம்.!
வயநாடா? ரேபரேலியா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், 2 மக்களவை தொகுதியில் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் ராகுல் ஒரு தொகுதியை மட்டுமே பராமரிக்க இயலும். மற்றொரு வெற்றிபெற்ற தொகுதியை கட்டாயம் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அதுசார்ந்த ஆலோசனையில் அக்கட்சியின் தலைமை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ராகுல் வயநாடு தொகுதி பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பை திறப்பார். ரேபரேலி தொகுதியில் அவர் தொடர்ந்து மக்களவை உறுப்பினராக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வயநாடு தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டு, மறுதேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!