"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ்.! இந்தியாவின் தற்போதைய நிலை!

இந்தியாவில் கொரோனாவால் 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகின் பல நாடுகள் அச்சத்தில் உள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,942 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 775 ஆக உயர்வடைந்து இருந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 824 ஆக உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில், உச்சகட்டமாக 7,628 பேர் பாதிக்கப்பட்டும் 323 பேர் மரணமடைந்தும் உள்ளனர். 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் 3071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 133 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.