#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடுமையிலும் கொடுமை..பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. போலீஸ் விசாரணை..!
பாட்ஷாபூரில் உள்ள நூர்பூர் - ஜார்சா சாலையில் துப்புரவு பணியாளரான ராஜேஷ் குமார் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு கிடந்த ஒரு பாலீத்தின் பையில் பச்சிளம் குழந்தை கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவில் பச்சிளம் குழந்தையை துருப்பிடித்த ஆயுதத்தினால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் மேலும் அந்த குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.