#Breaking: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; அதிர்ந்துபோன அதிகாரிகள்.!



Delhi HC judget Varma House Money Case 

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த ஹோலி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

இதனிடையே, தீயை அணைத்தபோது பணம் எரிந்தது தெரியவந்தது. இதனால் அவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்த நிலையில், அதிகாரிகள் எரிந்த பணக்கட்டுகள், எஞ்சிய பணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ரோஸ் கலர் ரிப்பன் ஏன் இருக்கு? அடிக்கல் நாட்டு விழாவில் அப்பாவியை சரமாரியாக தாக்கிய எம்.எல்.ஏ.!

பணம் கைப்பற்றப்பட்ட விசாரணை நடைபெற்று வருவதால், தற்காலிகமாக வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை வாயிலாக பணம் குறித்தும், நடவடிக்கை குறித்தும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

துறை ரீதியிலான தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், விரைவில் எடுக்கப்படும்/எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாடியே கவுத்துட்டாரு.. விவாகரத்து கேட்டு வந்த மனைவியை பாடியே சமாதானப்படுத்திய கணவர்.!