மழைநேரங்களில் கவனம்.. தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக, பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. இதனிடையே, நகரில் பெய்யும் கனமழை காரணமாக, அவ்வப்போது மின்சாரம் சாலையோர நடைபாதைகளில் கசிந்து மரணங்களும் நடக்கின்றன.
மின்சாரம் தாக்கி பலி
டெல்லியில் உள்ள படேல் நகர் மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில், திங்கட்கிழமையான நேற்று மழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில், சாலையோரம் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அது தெரியாமல் மின்கம்பத்தில் கைவைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானவர்
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் உயிரிழந்த இளைஞர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த நிலேஷ் ராய் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: உ.பியில் பயங்கரம்.. குவியல் குவியலாக பிணங்கள்.. இசைவிழா கூட்டநெரிசலில் சிக்கி 60 பேர் பலி?., 100 பேர் படுகாயம்.!
இதையும் படிங்க: அருவி நீரில் ஆனந்த குளியல்; நொடியில் நீருடன் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்.. இறுதி நொடியின் பகீர் காட்சிகள்.!