#Breaking: உ.பியில் பயங்கரம்.. குவியல் குவியலாக பிணங்கள்.. இசைவிழா கூட்டநெரிசலில் சிக்கி 60 பேர் பலி?., 100 பேர் படுகாயம்.!  



in Uttar Pradesh Ratibhanpur Hatras Stampede Uttar pradesh

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம், ரதிபன்ப்பூர் பகுதியில் போலெ பாலா சட்சங் எனப்படும் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கூடியிருந்தனர். 

கட்டுக்கடங்காமல் இருந்த மக்கள் வெள்ளத்தால் அரங்கம் திணறிப்போன நிலையில், கூட்டநெரிசலில் சிக்கிய மக்கள் பலரும் அடுத்தடுத்து எட்டவாஹ் உட்பட பல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: அருவி நீரில் ஆனந்த குளியல்; நொடியில் நீருடன் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்.. இறுதி நொடியின் பகீர் காட்சிகள்.!

60 பேர் பலி என தகவல் 

இதனிடையே, உள்ளூர் நிருபர்கள் பலரும் இந்த சம்பவத்தில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கூறுகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், விசாரணையில் களமிறங்கி இருக்கின்றனர். பல தகவல்கள் காத்திருக்கின்றன. 

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை எனினும், மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் நிலவரங்கள் கூறுகின்றன.

தற்போது வரை 23 பேர் உயிரிழப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏபிபி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் டூவீலரில் பயணம்.. சாலையோர டிவைடர் நெஞ்சில் சொருகி இளைஞர் பரிதாப பலி.!