7ம் கட்ட வாக்குபதிவில் நடந்த பரபரப்பு சம்பவம்; குட்டையில் வீசப்பட்ட ஈவிஎம் மெஷின்.! 



EVM Machine throwed on Pond 

 

8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று நடைபெறும் தேர்தலுடன், 7 கட்டமாக நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் நிறைவு பெறுகிறது. ஜூன் 04ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 

இன்று காலை 7 மணி முதலாக 7 வது கட்ட வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் வாக்குகளை செலுத்தி இருந்தனர். 

இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

குட்டையில் வீசப்பட்ட இவிஎம்

இந்நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள 9 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நாடடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் அரசியல்கட்சியின் முகவர்கள் அனுமதி செய்யப்படாமல் வெளியே இருக்க வைக்கப்பட்டனர். 

இதனால் ஆத்திரத்தில் சில பிரமுகர்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த இவிஎம் மையத்தை தூக்கிச்சென்று குட்டையில் வீசி தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் தொற்றிக்கொண்டது.

இதையும் படிங்க: ஆக்ரோஷத்தில் இளைஞரின் கட்டை விரலை கடித்து துண்டாக்கிய நாய்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!