மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆக்ரோஷத்தில் இளைஞரின் கட்டை விரலை கடித்து துண்டாக்கிய நாய்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாளா மாவட்டம், சுன்னம்பட்டிவாடா பகுதியில் வசித்து வருபவர் தல்லாப்பள்ளி பிரசாத். சம்பவத்தன்று இவர் அப்பகுதி பிரதான சாலையில் நின்றுகொண்டு இருந்தபோது, அங்கு ஆக்ரோஷத்துடன் வந்த நாய் பிரசாத்தை தாக்கி இருக்கிறது.
இந்த தாக்குதலில் பிரசாத்தின் கட்டை விரல் கடுமையான காயமடைந்த நிலையில், வலியால் அவர் அலறி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.
இதையும் படிங்க: கழுத்திலேயே கடித்த தெருநாய்; ரணமாக துடிதுடித்து பறிபோன 4 வயது சிறுமியின் உயிர்.. பதறவைக்கும் சம்பவம்.!
4 பேர் படுகாயம்
அப்போது ஆவேசத்தில் இருந்த நாய், கூடுதலாக 4 பேரை கடுமையாக விரட்டி தாக்கி இருக்கிறது. இதனால் அவர்களும் காயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள தெருநாயை பிடிக்க நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 88 டன் மதிப்பிலான பூஞ்சை வைத்த கெட்டுப்போன ஐஸ்கிரீம்கள்.. வாந்தியை வரவழைக்கும் ப்ரீஸரின் நிலை.!