மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பள்ளியில் கொடூரம்... 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! ஆசிரியர் கைது.!!
தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்த நிலையில் அந்த ஆசிரியரை பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தெலுங்கானா மாநிலத்தில் சிர்சில்லா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சாரதா என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் ரவீந்தர் என்பவர் தெலுங்கு ஆசிரியராக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பாக குட் டச் மற்றும் பேட் டச் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு மாணவிகள் தங்களுக்கு தெலுங்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியரான ரவீந்தர் பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக திட்டி வருவதாக நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!
ஆசிரியர் மீது வழக்கு பதிவு
புகாரைத் தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர் குறித்த ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் ஆசிரியர் ரவீந்தர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ரவீந்தர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெலுங்கானா பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: 20,000 ரூபாய்க்கு... கதற கதற கொலை செய்யப்பட்ட தாய்.!! மகன் உட்பட 3 பேர் கைது.!!