மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!
கேரள மாநிலத்தில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவன பணியாளர்
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 25 வயதான இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இந்த நபர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.
17 வயது சிறுமி பலாத்காரம்
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அப்பகுதியில் உள்ள வீட்டில் 17 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சென்ற அவர் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 20,000 ரூபாய்க்கு... கதற கதற கொலை செய்யப்பட்ட தாய்.!! மகன் உட்பட 3 பேர் கைது.!!
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பீர் பாட்டிலில் கிடந்த பல்லி; குடிமகனுக்கு பேரதிர்ச்சி.!