தமிழ்நாட்டில் சாட்டை, குஜராத்தில் பெல்ட்.. அண்ணாமலை பாணியை கையில் எடுத்த குஜராத் ஆம் ஆத்மீ பிரமுகர்.! 



gujarat aam aadmi party man beaten with Belt like TN Annamalai whiplash 

 

அண்ணாமலை பாணியை கையில் எடுத்த குஜராத் ஆம் ஆத்மீ பிரமுகர் ஒருவர், தன்னைத்தானே பெல்டால் அடித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

குஜராத் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர், இன்று பிரதமர், உள்துறை அமைச்சர் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். அம்மாநிலத்தின் முதல்வராக புபேந்திர பாட்டில் பணியில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: திடீரென பிரேக் அடித்த லாரி.. தனியார் பேருந்தின் வேகத்தால் 6 பேர் பரிதாப பலி..! 

இந்நிலையில், அங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆம் ஆத்மீ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2027ம் ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆம் ஆத்மீ பல்வேறு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 

அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மீ

அம்மாநிலத்தில் நடந்த மோர்பி பாலம் விபத்து, வதோதரா கப்பல் விபத்து, கள்ளச்சாராய மரணங்கள், சமீபத்தில் நடந்த தீ விபத்துகள், அரசின் தேர்வுகளில் வினாத்தாள் வெளியான விவகாரம் ஆகியவற்றை கையில் எடுத்து ஆம் ஆத்மீ அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டு இருந்த ஆம் ஆத்மீ கட்சி பிரமுகர், மக்களுக்கு பல விஷயங்களில் நியாயம் பெற்றுத்தர இயலவில்லை என தன்னைத்தானே பெல்டால் அடித்துக்கொண்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசு செயலற்று இருப்பதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் மாணவிக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என தன்னைத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டு, அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: கம்பியூட்டர் வேலை வேண்டாம்; விரலை வெட்டிக்கொண்ட நபர்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!