ஹரியானாவா? ராஜஸ்தானா?.. டிக்கெட் எடுக்க சொல்லி கிளம்பிய பஞ்சாயத்தால் மாறி-மாறி அபராதம்.!



Haryana Police Penalty to Rajasthan State Bus due to a Constable Conductor Argument 

 

மாநில அளவில் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் அரசுத்துறை நிறுவனங்கள், பிற மாநிலத்தில் இருந்தும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கிக்கொள்ள மண்டல வாரியாக அனுமதி வழங்குகிறது.

நடத்துனர் - பெண் காவலர் வாதம்

இதனிடையே, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சமீபத்தில் தனது மாநில எல்லைக்குள் பயணம் செய்த ராஜஸ்தான் மாநில பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவரிடம் காவலர் டிக்கெட் எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க: மனைவியுடன் சிறுவன் கள்ளத்தொடர்பு.? கழுத்தை நெரித்து கொடூர கொலை.!! பரபரப்பு வாக்குமூலம்.!!

தான் காவல் அதிகாரி என்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என அவர் கூறிவிட, உங்களின் மாநில பேருந்தில் தான் நீங்கள் பயணிக்க இலவசம், இது ராஜஸ்தான் மாநில பேருந்து என வாதம் நடந்துள்ளது. இறுதியில் காவலர் ரூ.50 பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். 

வீடியோ வைரல்

இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகவே, அதிருப்தியடைந்த ஹரியானா மாநில காவல்துறையினர் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட அரசுப்பேருந்துகளுக்கு வெவ்வேறு காரணங்கள் கூறி அபராதம் விதித்தனர். 

போட்டிபோட்டு அபராதம்

இதனால் ராஜஸ்தான் மாநில காவல்துறையினர், ஹரியானா மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்து இருந்தனர். இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது. 

தமிழகத்திலும் நடந்தது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் அதிகாரி ஒருவரிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லி நடத்துனர் - காவலர் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், காவல்துறை Vs போக்குவரத்துத்துறை பிரச்சனை தமிழகத்தில் ஏற்பட்டு, பின் சுமூகமாக அவை முடித்துக்கொள்ளப்பட்டது. காவலர்கள் பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்து, பின் அதனை ரத்து செய்தனர். இந்த பிரச்சனை போல அங்கும் நடந்துள்ளது.

இதையும் படிங்க: பட்டாசு விற்பனை கடையில் திடீர் தீவிபத்து; சிதறியோடிய மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்.!